தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.1 சதவீதத்திற்க்கும் குறைவு - சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் + "||" + Positivity rate is below 0.1%: Delhi Health Minister Satyendar Jain

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.1 சதவீதத்திற்க்கும் குறைவு - சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின்

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.1 சதவீதத்திற்க்கும் குறைவு - சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.1 சதவீதத்திற்க்கும் குறைவாக உள்ளது என்று சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறினார்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறுகையில், 

டெல்லியில் நேற்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு 1.25 ஆண்டுகளில் மிகக் குறைவானவை ஆகும். இதனால் கொரோனா பாதிப்பு விகிதம் 0.1% க்கும் குறைவாக உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரி 693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலத்திற்கு தடுப்பூசி கிடைப்பது குறைவு. நேற்று மாநிலத்திற்கு 1.5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. இது நாளைக்குள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு தடுப்பூசி மையங்கள் மூடப்படும். மேலும் மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.