தேசிய செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு + "||" + Rahul Gandhi walks out of House panel meet on defence as chair denies discussion on LAC

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு

நாடாளுமன்ற  நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு
டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது. இதில் அனைத்து கட்சிகளின் முக்கிய எம்பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு விவகாரங்களான பாகிஸ்தானுடனான பிரச்சினை, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடனான மோதல், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று  ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால், ராகுல் காந்தியின் கோரிக்கையை குழு தலைவர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, ராகுல் காந்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து, பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் ஜூயல் ஓரம் கூறுகையில், “ கண்டோன்மெண்ட் போர்டுகளின் செயல்பாடுகள் பற்றி  விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனவே, அது பற்றி மட்டுமே விவாதிக்க முடியும். வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கான விதிகளை பின்பற்றி 14 நாட்கள் முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு
தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. ‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
3. பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு திருப்பங்களையடுத்து காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார்.
4. பெரியார் பிறந்த நாள்: ராகுல் காந்தி டுவிட்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. ''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.