தேசிய செய்திகள்

செல்பி எடுக்கும் போது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம் + "||" + Famous female Instagram influencer Sofia Cheung dies after falling off waterfall while taking selfie!

செல்பி எடுக்கும் போது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்

செல்பி எடுக்கும் போது மலை அருவியில்  இருந்து தவறி விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங்( 32) செல்பி எடுக்கும் போது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
புதுடெல்லி

ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங்.  தனது மூன்று நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை (ஜூலை 10) மலையேறுபவர்களிடையே பிரபலமான ஹா பாக் லாய் என்ற மலை பூங்காவிற்கு பயணம் மேற்கொண்டனர்.அங்கு பூங்காவின் அன்னாசி மலை தளத்தில் உள்ள ஒரு அருவியின்  விளிம்பில் நின்று சோபியா சியுங் செல் பி எடுத்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சோபிய தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அவரது நண்பர்கள்  மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் சோபியா உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். 

சோபியா சியுங்கின் இன்ஸ்டாகிராம் அவரது பயணங்கள் மற்றும் விடுமுறை கால படங்களால்  நிறைந்துள்ளது. அவரது கடைசி படம், ஜூலை 9 அன்று வெளியிடப்பட்டது, அவர் கடற்கரையின் கரையில்  போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. படத்தின் தலைப்பு, “சிறந்த நாட்கள் வருகின்றன. அவை சனி மற்றும் ஞாயிறு என அதில் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி தொடங்கி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்தது.
2. இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 27-வது இடம்
இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்களில் முதல் இடம் ரொனால்டோ , 27 வது இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார்.