மாநிலங்களிடம் 2.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


மாநிலங்களிடம் 2.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 16 July 2021 9:26 AM GMT (Updated: 16 July 2021 9:26 AM GMT)

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களிடம் 2.51 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 41 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரத்து 530 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 38,58,75,958 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 2,51,62,572 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 38,78,078 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 


Next Story