அசாம்: பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் தீ வைத்து எரிப்பு


அசாம்:  பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 12:45 PM GMT (Updated: 17 July 2021 12:45 PM GMT)

அசாமில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் முதல் மந்திரி முன்னிலையில் பொதுவெளியில் தீ வைத்து எரிக்கப்பட்டன.



திஸ்பூர்,

அசாமில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பொதுவெளியில் இன்று தீ வைத்து கொளுத்தி, எரிக்கப்பட்டன.

இதுபற்றி ஹிமந்தா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, போதை பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் இன்று நாங்கள் எரித்திருக்கிறோம்.  போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட விசயங்களில் மாநில போலீசார் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கடைப்பிடிக்கிறது என்ற திடம் நிறைந்த செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகிறது.

ரூ.1,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் கொண்ட போதை பொருள் வினியோகம் மற்றும் உற்பத்தியை நாங்கள் தடை செய்வோம் என கூறியுள்ளார்.


Next Story