தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் ஆதரவில்லா விலங்குகளுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி உதவி; பிரதமர் புகழாரம் + "||" + Former Army officer assisting unsupported animals during the Corona period; PM praises

கொரோனா காலத்தில் ஆதரவில்லா விலங்குகளுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி உதவி; பிரதமர் புகழாரம்

கொரோனா காலத்தில் ஆதரவில்லா விலங்குகளுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி உதவி; பிரதமர் புகழாரம்
கொரோனா காலத்தில் ஆதரவில்லா விலங்குகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற பெண் ராணுவ அதிகாரிக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.


புதுடெல்லி,


விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முன்னாள் ராணுவ வீரரின் கருணை மற்றும் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வருபவர் பிரமீளா சிங்.  இந்திய ராணுவத்தில் பணியாற்றி மேஜராக ஓய்வு பெற்றவர்.  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது தமது தந்தை ஷியாம்வீா் சிங்குடன் இணைந்து ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தெருவோரம் அலைந்து திரிந்த விலங்குகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டார்.

அவர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட வைப்பு தொகையை கொண்டு தெருவில் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனா்.

இதனையடுத்து, அவா்களின் கருணை மற்றும் சேவையை பாராட்டி பிரதமா் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத நிலையை மனோபலத்துடன் நாம் எதிர்கொண்டுள்ளோம். மக்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க இயலாதவாறு இந்த வரலாற்று தருணம் அமைந்துள்ளது. 
இதுபோன்ற நிலை மனிதா்களுக்கு மட்டுமல்லாமல், மனிதா்களுடன் நெருக்கமான தொடா்பில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும் சவாலானதாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆதரவற்ற விலங்குகளின் வலி மற்றும் தேவைகளை உணா்ந்து அவற்றின் நல்வாழ்விற்காக நீங்கள் தனிப்பட்ட அளவில் முழு திறனையும் அளித்து செயல்படுவது பாராட்டுக்குரியது.

அதேவேளையில், இந்த சவாலான நேரத்தில், மனித சமூகத்தை எண்ணி பெருமை கொள்ளும் வகையில் ஏராளமான முன்னுதாரண நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மோடி, மேஜா் பிரமீளா சிங்கும், அவரது தந்தையும் எடுத்துள்ள முயற்சிகள் சமூகத்தில் மிகுந்த விழிப்புணா்வு மற்றும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, பொது முடக்கத்தின்போது தாம் தொடங்கிய விலங்குகளின் பராமரிப்பு பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக பிரமீளா சிங் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டார். ஆதரவற்ற விலங்குகளின் துயரத்தை அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவா், இது போன்ற விலங்குகளுக்கு உதவ அதிகமானோர் முன் வரவேண்டும் என்று அந்த கடிதத்தில் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்
மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
2. வீரர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும் பிரதமரை முதன்முறையாக இந்தியா பெற்றுள்ளது; கிரண் ரிஜிஜூ புகழாரம்
வீரர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும் பிரதமரை முதன்முறையாக இந்தியா பெற்றுள்ளது என விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
3. ‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயன் கையொப்பத்தால்’’ கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து புகழாரம்
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், இன்று தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயனின் கையொப்பத்தால்’’, என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
4. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி புகழாரம்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
5. மன் கி பாத் நிகழ்ச்சி: டவ்-தே, யாஸ் புயல்களை எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்
நாட்டில் கடந்த 10 நாட்களில் டவ்-தே, யாஸ் ஆகிய இரு புயல்களை தைரியமுடன் எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.