தினமும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை மத்திய அரசு மீது ராகுல் தாக்கு


தினமும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை மத்திய அரசு மீது ராகுல் தாக்கு
x
தினத்தந்தி 19 July 2021 2:50 AM GMT (Updated: 2021-07-19T08:20:09+05:30)

தினமும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா 2-வது அலையின்போது, நடுத்தர வர்க்க மக்களும் உணவுப்பொருட்களுக்காக ரேஷன் கடைகளில் நிற்க வேண்டி வந்தது என்று ஒரு ஊடக செய்தி வெளியானது.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘உங்களின் அதிகாரப்பசி, லட்சக்கணக்கானவர்களை உணவுக்காக ஏங்க வைத்துவிட்டது. நீங்கள் தினமும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை’ என்று மத்திய அரசை சாடியுள்ளார்.

Next Story