மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம்


மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம்
x
தினத்தந்தி 19 July 2021 6:12 AM GMT (Updated: 2021-07-19T12:03:05+05:30)

மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று பெற்றது. 

மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தமிழிசில் பதவி ஏற்றுக்கொண்டார். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ்காந்தி புகழ் வாழ்க என விஜய் வசந்த் எம்.பி. குறிப்பிட்டார்.

Next Story