ஜூன் மாதத்தில் 31.13 லட்சம் பேர் விமான பயணம்-இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம்


ஜூன் மாதத்தில் 31.13 லட்சம் பேர் விமான பயணம்-இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம்
x
தினத்தந்தி 19 July 2021 8:27 PM GMT (Updated: 19 July 2021 8:27 PM GMT)

ஜூன் மாதத்தில் சுமார் 31.13 லட்சம் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

ஜூன் மாதத்தில் சுமார் 31.13 லட்சம் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இது மே மாதத்தில் பயணித்த 21.15 லட்சத்தை விட 47 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 57.25 லட்சம் பேர் விமானம் மூலம் உள்நாட்டிற்குள் பயணம் செய்தனர். கொரோனா 2-வது அலை நாட்டையும், விமானத்துறையையும் மோசமாக தாக்கியது. 

இதனால் மே மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது. 21 லட்சமாக சரிந்தது.ஜூன் மாதத்தில் கொரோனா சற்று தணிந்ததால், விமான பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. மேற்கண்ட தகவல்களை இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) தெரிவித்துள்ளது

Next Story