தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா + "||" + 62 new Covid-19 cases, 4 fatalities; positivity rate at 0.09 per cent

டெல்லியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா

டெல்லியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.09 சதவீதமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,671ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 61 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,10,066 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,039ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி டெல்லியில் இன்னும் 566 பேர் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.