ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலம் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் - மம்தா பானர்ஜி


ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலம் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 21 July 2021 11:15 AM GMT (Updated: 2021-07-21T16:45:30+05:30)

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் உரையாற்றினார்.

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல்-அந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் செல்லிடப்பேசியில் பொருத்தியுள்ளார்கள்.

மத்திய அரசை அடக்கி வைக்கவில்லையெனில், நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.

ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் செல்லிடப்பேசியும் வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன்.

பாஜகவை நாட்டிலிருந்து நீக்கும் வரை அனைத்து மாநிலங்களிலும் 'கேலா' நடக்கும்.

 ஆகஸ்ட் 16 ஆம் தேதி 'கெலா திவாஸ்' கொண்டாடுவோம். ஏழைக் குழந்தைகளுக்கு கால்பந்து கொடுப்போம்.

 இன்று நமது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பாஜக நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்ரான் மேக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தென்னாப்பிரிக்கா அதிபர் சைரில் ராமஃபோசா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் எண்கள் வேவு பார்கப்படுவதற்காக இலக்கு வைக்கப்பட்டதாக தி வயர் நிறுவனம் அதிர்ச்சி செய்தியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பெகாசஸ் மென்பொருளை தயாரித்த இஸ்ரேன் நாட்டை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம், 36 அரசுகளுக்கு பணி செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Next Story