தேசிய செய்திகள்

என் மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்... யாரும் ஒட்டு கேட்க முடியாது - மம்தா பானர்ஜி அதிரடி.! + "||" + Have Plastered My Phone’s Camera to Prevent Snooping: Mamata Targets Centre Over Pegasus Row

என் மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்... யாரும் ஒட்டு கேட்க முடியாது - மம்தா பானர்ஜி அதிரடி.!

என்  மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்... யாரும் ஒட்டு கேட்க முடியாது - மம்தா பானர்ஜி அதிரடி.!
மத்திய அரசை அடக்கி வைக்கவில்லை என்றால் , நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பா.ஜ.க தரைமட்டமாக்கியுள்ளது என மம்தா பானர்ஜி கூறினார். .
கொல்கத்தா
 தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நேற்று  நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி  உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல்-மந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் மொபைலில்  பொருத்தியுள்ளார்கள்.

செல்போன் ஆடியோ வீடியோ மூலமாக ஒட்டுக் கேட்கப்படுவதால் எனது செல்போனின் கேமராவை டேப் போட்டு மூடி வைத்திருக்கிறேன் என  தனது போனை உயர்த்திக் காட்டியபடி கூறினார்

தொடர்ந்து பேசும் போது மத்திய அரசை அடக்கி வைக்கவில்லை என்றால் , நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.

ஜனநாயகத்தையும் நாட்டையும் சுப்ரீம் கோர்ட்  காப்பாற்ற வேண்டும். அனைவரின் மொபைலும்  வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கு; ஆக.12 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2. உடல்நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வாய்ப்பு...!
மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
4. மேற்குவங்காள சட்டசபை: பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் அமளி பாதியிலேயே உரையை நிறுத்திய கவர்னர்
மேற்குவங்காள சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் அமளியால் கவர்னர் உரையை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்
5. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: பாதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பதிவு செய்ய கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை:அனைத்து வழக்குகளையும் பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கவும் கொல்கத்தா ஐகோர்ட் மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.