தெலுங்கானாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


தெலுங்கானாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 July 2021 4:44 AM GMT (Updated: 2021-07-23T10:14:23+05:30)

தெலுங்கானாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதோடு, குமுரம் பீம், ஜக்தைல், வாரங்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் 9 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நிர்மல் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அங்கு பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட மக்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story