டெல்லி; கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் சந்தைகளில் கூடும் மக்களால் தொற்று பரவும் அபாயம்


டெல்லி; கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் சந்தைகளில் கூடும் மக்களால் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 24 July 2021 5:06 AM GMT (Updated: 24 July 2021 5:06 AM GMT)

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் நேற்று 0.09 சதவிகிதமாக உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது. தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

 இந்த நிலையில்,  டெல்லியின் காசியாபூர் காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் மக்கள் அதிக அளவில் கூடினர். பெரும்பாலானோர் மாஸ்க் கூட அணியாமல் சென்றதை காண முடிந்தது.  3-வது அலை அச்சுறுத்தல் உள்ள நிலையில், மக்கள் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு செல்வது கவலையளிப்பதாக உள்ளது. 

Next Story