மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி


மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி
x
தினத்தந்தி 24 July 2021 4:29 PM GMT (Updated: 2021-07-24T21:59:17+05:30)

மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விழுந்ததில் 5 பேர் பலியானார்கள்.

மும்பை,

மராட்டிய  மாநிலம், மும்பையின் வொர்லி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் லிப்ட்  திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 5 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தனார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாரம் தாங்காமல் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அம்மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

Next Story