ஒடிசா: ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு ஒலிம்பிக் மைதானம் உருவாக்கிய சிறுமி


ஒடிசா:  ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு ஒலிம்பிக் மைதானம் உருவாக்கிய சிறுமி
x
தினத்தந்தி 25 July 2021 1:03 AM GMT (Updated: 25 July 2021 1:03 AM GMT)

ஒடிசாவில் ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் ஒன்றை சிறுமி ஒருவர் உருவாக்கி உள்ளார்.



புவனேஸ்வர்,

ஒடிசாவில் பூரி நகரை சேர்ந்த சிறுமி நந்தினி பட்னாயக் (வயது 14).  இவர், ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் இதனை அவர் தயாரித்து உள்ளார்.

இதுபற்றி சிறுமி நந்தினி பட்னாயக் கூறும்போது, ஏறக்குறைய 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஐஸ்கிரீம் குச்சிகள் எனக்கு தேவைப்பட்டது.  அவற்றை கொண்டு மினி ஒலிம்பிக் ஸ்டேடியம் ஒன்றை உருவாக்கி உள்ளேன்.  நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இதனை அமைத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story