ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீரில் 4 நாள் பயணம்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீரில் 4 நாள் பயணம்
x
தினத்தந்தி 26 July 2021 12:39 AM GMT (Updated: 26 July 2021 12:39 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் சென்றுள்ளார்.




ஜம்மு,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்றுள்ளார்.  இதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.

அதன்பின் அவா் பகல் 11.15 மணியளவில் ஸ்ரீநகா் விமான நிலையம் சென்றடைந்து உள்ளார்.  அவரை கவர்னர் மனோஜ் சின்ஹா, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனா்.

வருகிற 28ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் இன்று லடாக்கின் திராஸ் பகுதிக்கு சென்று, கார்கில் போர் வெற்றி தினத்தில் அங்குள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

அதன்பின், காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.  அவரின் வருகையை முன்னிட்டு இரு யூனியன் பிரதேசங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவா் தங்கும் ஆளுநா் மாளிகை பகுதியை ராணுவத்தினரும், போலீசாரும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். பல்வேறு இடங்களில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


Next Story