ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை; எடியூரப்பா பேட்டி


ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை;  எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 7:47 AM GMT (Updated: 2021-07-26T13:17:39+05:30)

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து இன்று எடியூரப்பா ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை  மாநில ஆளுநரிடம் அளித்த பின்பு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது:- “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்த படி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன். 

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்ற விவரம் எனக்கு கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.  


Next Story