கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா பாதிப்பு


கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா பாதிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 2:57 PM GMT (Updated: 26 July 2021 2:57 PM GMT)

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். 

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும்  3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் இன்னும் ஜிகா பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Next Story