பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்; ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்


பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்; ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
x
தினத்தந்தி 27 July 2021 9:08 PM GMT (Updated: 27 July 2021 9:08 PM GMT)

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

ஆனாலும் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட்டு பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட மொத்தம் 7 கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

Next Story