மும்பை ஐகோர்ட்டில் வரும் 2-ந் தேதி முதல் நேரடி விசாரணை


மும்பை ஐகோர்ட்டில் வரும் 2-ந் தேதி முதல் நேரடி விசாரணை
x
தினத்தந்தி 30 July 2021 12:00 AM GMT (Updated: 30 July 2021 12:00 AM GMT)

கொரோனா வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து ஐகோர்ட்டு மற்றும் துணை கோர்ட்டுகளில் வேலைநேரம் குறைக்கப்பட்டது. மேலும் வழக்குகள் காணொலி காட்சிகள் மூலம் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் முக்கிய வழக்குகளை மட்டும் காணொலி காட்சி மூலமாக விசாரித்துவந்த கோர்ட்டு பின்பு அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து நேரடி விசாரணை தொடங்குவது குறித்து தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் ஐகோர்ட்டு வரும் 2-ந் தேதி முதல் நேரடி விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஐகோர்ட்டில் அனைத்து அமர்வுகளும் வாரத்தில் 3 நாட்கள் நேரடியாகவும், ஒரு நாளில் காணொலி காட்சி மூலமாகவும் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் நேரில் விசாரணைக்கு வர முடியாத வக்கீல்கள் காணொலி காட்சி மூலமாக வழக்கு விசாரணையில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

நேரடி விசாரணைக்கு தேவையான நபர்கள் மட்டுமே நீதிபதியின் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story