பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் சேர விரும்பாதது ஏன்? - ஜெகதீஷ்ஷெட்டர் விளக்கம்


பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் சேர விரும்பாதது ஏன்? - ஜெகதீஷ்ஷெட்டர் விளக்கம்
x
தினத்தந்தி 30 July 2021 10:23 PM GMT (Updated: 30 July 2021 10:23 PM GMT)

பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் சேர விரும்பாதது ஏன் என ஜெகதீஷ்ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் சேர விரும்பவில்லை என்று பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகதீஷ்ஷெட்டர் அறிவித்தார். 

இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் முன்னாள் முதல்-மந்திரி. மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றி உள்ளேன். எனக்கும் சுயமரியாதை, மரியாதை உள்ளது. அதனால் பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் இடம் பெறக்கூடாது என்று முடிவு எடுத்தேன். 

முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தும், எடியூரப்பா மந்திரிசபையில் சேர்ந்தேன். இதற்கு அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. அவர் மூத்த தலைவர். அதனால் நான் மந்திரியாக பணியாற்றினேன். நான் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன். எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

Next Story