புனேயில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; அஜித்பவார் தொடங்கி வைத்தார்


புனேயில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; அஜித்பவார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 July 2021 12:57 AM GMT (Updated: 2021-07-31T06:27:30+05:30)

புனேயில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை துணை முதல்- மந்திரி அஜித்பவார் தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயில் திட்டம்
மராட்டிய மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் புனேயில் வனஸ் -ராம்வாடி மற்றும் பிம்பிரி சிஞ்வட்- சுவார்கேட் இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் வனஸ்- ராம்வாடி வழித்தடம் முழுவதும் மேல்மட்ட பாதையாக அமைக்கப்படுகிறது.பிம்பிரி சிஞ்வட் - சுவார்கேட் வழித்தடத்தில் சிவாஜி நகர் வேளாண் கல்லூரிக்கு பிறகு சுரங்க வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

சோதனை ஓட்டம்
இந்தநிலையில் புனே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, வனஸ் (கோத்ரூட்) - ஐடியல் காலனி இடையே 3 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு நடந்த விழாவில் துணை முதல்- மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் புனே மேயர் முரளிதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புனே மாநகராட்சி பகுதிக்குள் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கி இருப்பது நகர மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனேயில் மெட்ரோ ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story