133 ஆண்டு பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்


133 ஆண்டு பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்
x
தினத்தந்தி 1 Aug 2021 12:12 AM GMT (Updated: 1 Aug 2021 12:12 AM GMT)

கன்னட திரையுலகின் பிரபல நடிகரான கிச்சா சுதீப் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிவமொக்கா டவுனில் பி.எச். ரோட்டில் அரசு கன்னட மொழி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு 133 ஆண்டுகள் ஆகிறது. இதனால் பள்ளி கட்டிட சுவர்கள் விரிசில் ஏற்பட்டு சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. இதுபற்றி அறிந்த நடிகர் சுதீப், அந்த பள்ளிக் கூடத்தை தத்தெடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் அந்த பள்ளிக் கூடத்தை தத்தெடுத்துள்ளார். அந்த பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். தற்போது பள்ளி கட்டிடம் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. 

பழமையான பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Next Story