மந்திரிசபையை விரைவாக அமைக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்


மந்திரிசபையை விரைவாக அமைக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Aug 2021 12:01 AM GMT (Updated: 2021-08-02T05:31:25+05:30)

ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் மக்களின் குறைகளை கேட்கவில்லை. மக்களுக்கு உதவ மந்திரிசபையை விரைவாக அமைக்க வேண்டும்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகன்னடாவிலும் அதிகளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முதல்-மந்திரி மட்டுமே உள்ளார். மந்திரிகள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் மக்களின் குறைகளை கேட்கவில்லை. மக்களுக்கு உதவ மந்திரிசபையை விரைவாக அமைக்க வேண்டும். அப்போது தான் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். இதில் பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story