காஷ்மீர்: டாப் 10 பயங்கரவாதிகள் பட்டியல் வெளியீடு


காஷ்மீர்:  டாப் 10 பயங்கரவாதிகள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 3 Aug 2021 6:53 AM GMT (Updated: 2021-08-03T12:23:47+05:30)

காஷ்மீரில் போலீசாரால் தேடப்படும் டாப் 10 பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.ஜம்மு,

நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என கிடைத்த உளவு துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரால் தேடப்படும் டாப் 10 பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  அவற்றில் 3 பேர் புதியவர்கள்.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டாப் 10 பயங்கரவாதிகள்:

பழைய பயங்கரவாதிகள்:  சலீம் பார்ரே, யூசுப் கந்துரூ, அப்பாஸ் சேக், ரியாஸ் செடர்கண்ட், பரூக் நளி, ஜுபைர் வானி மற்றும் அஷ்ரப் மோல்வி.

இதுதவிர, சாகிப் மன்சூர், உமர் முஸ்டாக் கந்தே மற்றும் வாகீல் ஷா ஆகிய 3 புதிய பயங்கரவாதிகளும் இடம் பெற்று உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story