கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு


கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 10:47 AM GMT (Updated: 2021-08-04T16:17:58+05:30)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

பெங்களூரு,

எடியூரப்பாவின் ராஜினாமாவை  தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி கா்நாடக புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில்   இடம் பெறுபவர்கள் குறித்து பாஜக தீவிர ஆலோசனை நடத்தியது. 

 இந்த நிலையில், இன்று 29 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.  இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அதுபோல  யாருக்கும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை.

Next Story