கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : மத்திய அரசு


கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : மத்திய அரசு
x
தினத்தந்தி 4 Aug 2021 4:39 PM GMT (Updated: 2021-08-04T22:09:04+05:30)

பண்டிகை காலம் வரவிருப்பதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பண்டிகை காலம் வரவிருப்பதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ள அறிவுறுத்தலில் 

“ மொஹரம் பண்டிகை  தொடங்கி  அக்டோபர்  15 ஆம் தேதி துர்கா பூஜை வரை என வரும் நாட்களில் அடுத்ததடுத்து பண்டிகைகள் வர உள்ளன. எனவே, உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story