தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் வெண்பல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கம்: அஜித்பவார் + "||" + Olympic medal to mark start of golden era for Indian hockey: Ajit Pawar

ஒலிம்பிக்கில் வெண்பல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கம்: அஜித்பவார்

ஒலிம்பிக்கில் வெண்பல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கம்: அஜித்பவார்
ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம்

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் காலை வெண்கலப்பதக்கத்திற்கான ஆண்கள் ஆக்கி போட்டி நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி, ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்திய ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று வரலாறு படைத்து உள்ளது. ஆக்கியின் அணியின் வெற்றியை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.

பொற்காலத்தின் தொடக்கம்

இதில் துணை முதல்-மந்திரியும், மாநில ஒலிம்பிக் சங்க சேர்மனுமான அஜித்பவாரும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "கடின உழைப்பு மற்றும் காத்திருப்புக்கு பிறகு 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்து உள்ளது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாட்டின் கவுரவம் நிலைநாட்டப்பட்டு உள்ளது. இந்த வெண்கல பதக்கம் இந்திய ஆக்கியின் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும்" என்றார்.

இதேபோல அவா் இந்திய ஆக்கி அணிக்கு டுவிட்டரிலும் வாழ்த்து கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
2. வருமான வரி சோதனை முடிந்ததும் கருத்து தெரிவிப்பேன்: அஜித்பவார்
வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு அதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பேன் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.
3. பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.