டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் கவுரவிப்பு


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் கவுரவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2021 6:07 PM GMT (Updated: 2021-08-09T23:37:26+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்தநிலையில்,  மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லவ்லினா போா்கோஹெய்ன், ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், மகளின் ஹாக்கி அணி வீராங்கனைகள் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்குர், செயலாளர் நிஷித் பிரமானிக், சட்டத் துறை அமைச்சரும், முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story