கேரளாவில் மதுக்கடைக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Aug 2021 9:58 PM GMT (Updated: 11 Aug 2021 9:58 PM GMT)

கேரளாவில் மதுபானங்கள் வாங்க வருவோர், இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கேரள மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், குறிப்பிட்ட சதவீத பாதிப்புகள், கேரள மாநிலத்தில் இருந்து பதிவாகின்றன.

இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கடைகள், நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கேரள ஐகோர்ட்டில் கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கில் அம்மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளாவில் உள்ள மதுக்கடைகளுக்கு செல்வோர் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story