இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது!
x
தினத்தந்தி 12 Aug 2021 4:15 AM GMT (Updated: 12 Aug 2021 4:15 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,77,706 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 2,842 அதிகம்.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,669 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,069  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050  ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,87,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 52,36,71,019 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 44,19,627 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story