இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்ற வேண்டும்; மோகன் பகவத்


இந்தியாவை  சுயசார்பு நாடாக மாற்ற  வேண்டும்; மோகன் பகவத்
x
தினத்தந்தி 15 Aug 2021 7:36 AM GMT (Updated: 15 Aug 2021 7:36 AM GMT)

எந்த அளவு சுய சார்பு மிக்க நாடாக இருக்கிறதோ அந்த அளவு பாதுகாப்பான நாடாக இருக்கும் என மோகன் பகவத் கூறினார்.

மும்பை,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பையில் உள்ள  பள்ளி ஒன்றில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது;- “ நமது தேசம் சுயசார்பு மிக்கதாக இருக்க வேண்டும். எந்த அளவு சுய சார்பு மிக்க நாடாக இருக்கிறதோ அந்த அளவு பாதுகாப்பான நாடாக இருக்கும். எவ்வளவு சம்பாதிக்கிறமோ அதை வைத்து வாழ்க்கையின் தரத்தை  நிர்ணயம் செய்யக்கூடாது. எவ்வளவு திருப்பி அளிக்கிறோமோ அதை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

பிற அனைத்து அம்சங்களும்  பொருளாதார பாதுகாப்பை சார்ந்தது. பரவலாக்கப்பட்ட  உற்பத்தி நமது பொருளாதாரத்திற்கு உதவுவதாக இருக்கும். வேலைவாய்ப்பை மற்றும் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும். நமது சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவுகூர வேண்டும்” என்றார். 

Next Story