எச்.ஏ.எல். தயாரித்த இந்துஸ்தான்-228 சிவில் விமான சோதனை ஓட்டம் வெற்றி


எச்.ஏ.எல். தயாரித்த இந்துஸ்தான்-228 சிவில் விமான சோதனை ஓட்டம் வெற்றி
x
தினத்தந்தி 16 Aug 2021 9:57 PM GMT (Updated: 16 Aug 2021 9:57 PM GMT)

எச்.ஏ.எல். நிறுவனம் சார்பில் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்துஸ்தான்-228 என்ற சிவில் விமானம் கட்டமைக்கப்பட்டது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்தது.

இதில் விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது. 

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எச்.எல்.ஏ. சாா்பில் தயரிக்கப்பட்ட இந்துஸ்தான்-228 சிவில் விமானம் சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. இது எச்.எல்.ஏ.க்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த விமானம் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும். மத்திய அரசின் உதான் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் இந்துஸ்தான்-228 விமானம் தயாரிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் மாநில அரசுகளின் பல்வேறு தேவைகளுக்கும், தளவாட பொருட்களை ஏற்றி செல்லவும் உதவும். முக்கிய நபர்கள் பயணம், விமான ஆம்புலன்ஸ், வான்வழி கண்காணிப்பு உள்பட பல பணிகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story