தேசிய ஆசிரியர் விருதுகள் பெறும் 44 பேர் அடங்கிய பட்டியல் வெளியீடு


தேசிய ஆசிரியர் விருதுகள் பெறும் 44 பேர் அடங்கிய பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 18 Aug 2021 7:08 PM GMT (Updated: 18 Aug 2021 7:08 PM GMT)

தேசிய ஆசிரியர் விருதுகள் பெறும் 44 பேர் அடங்கிய பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.



புதுடெல்லி,

நாடு முழுவதும் முதன்மை, நடுநிலை மற்றும் மேனிலை பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய அளவில் ஆசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, மத்திய கல்வி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை ஆகியவை 2021ம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் பெறும் 44 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

வருகிற செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினத்தில், தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.


Next Story