பள்ளி கூடத்தில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது: கர்நாடகாவில் மாணவி பேட்டி


பள்ளி கூடத்தில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது:  கர்நாடகாவில் மாணவி பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2021 8:02 AM GMT (Updated: 23 Aug 2021 8:02 AM GMT)

கர்நாடகாவில் பள்ளி கூடம் திறந்துள்ள சூழலில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது என மாணவி பேட்டியில் கூறியுள்ளார்.



பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்படும் என அரசு அறிவித்தது.  இதன்படி, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகினர்.

இதனை முன்னிட்டு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.  அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

இதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.  மாணவ மாணவிகள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொண்டேன்.  கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி கூடங்கள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் சகியா என்ற மாணவி கூறும்போது, ஆன்லைன் வகுப்புகள், நெட்வொர்க் சரியாக கிடைக்காமல் பாதிக்கப்பட்டன.  ஆனால், பள்ளி கூடத்தில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது.  முக கவசம், சேனிடைசர் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story