சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு!


சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு!
x
தினத்தந்தி 29 Aug 2021 11:26 PM GMT (Updated: 29 Aug 2021 11:26 PM GMT)

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைக்கப்பட்டது.

வாஷிங்டன், 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த விண்வெளி மையத்தில் சுழற்சி முறையில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வு பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள் ஆகியவை சரக்கு விண்கலங்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து 2,170 கிலோ எடையுள்ள சரக்குகளை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பின.

ஆய்வுப் பணிகளுக்கு தேவையான கருவிகள், விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள 7 விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் ( ஐஸ்கிரீம் உள்பட) மற்றும் ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மனித உயரம் உடைய ரோபோ கை உள்ளிட்டவை சரக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சரக்கு விண்கலம் இன்று (திங்கட்கிழமை) விண்வெளி ஆய்வு மையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story