மேகதாது அணை: காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு


மேகதாது அணை: காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 7:22 AM GMT (Updated: 31 Aug 2021 7:22 AM GMT)

மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைக்கு காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி, சேவா பவனில் மத்திய நீர்வளத்துறை ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தின் போது மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்கக்கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி கர்நாடக அரசு நீர்பங்கீடு அளிக்கவில்லை என்றும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story