தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு + "||" + India reports 47,092 new #COVID19 cases, 35,181 recoveries and 509 deaths in last 24 hours, as per Health Ministry

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,529  ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
இந்தியாவில் நேற்று 16 ஆயிரத்து 862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
2. இந்தியாவில் மேலும் 16,862- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
3. உலக பட்டினிக் குறியீடு ; பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட பின் தங்கியது இந்தியா
கடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
4. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி
இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்
5. இந்தியாவில் நேற்றை விட 19.99 சதவீதம் உயர்ந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.