கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது


கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 6 Sep 2021 3:50 PM GMT (Updated: 6 Sep 2021 3:50 PM GMT)

கர்நாடகாவில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலைபாதிப்பு தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,56,137 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,426 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,071 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,01,299 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 17,386 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story