70 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: மத்திய சுகாதாரத்துறை மந்திரி


70 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: மத்திய சுகாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 7 Sep 2021 5:20 PM GMT (Updated: 7 Sep 2021 5:20 PM GMT)

இதுவரை மொத்தம் 70 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

70 கோடி தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டது. பிறகு, முன்கள பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், 60 வயதை தாண்டியவர்கள், 45 வயதை கடந்தவர்கள் என படிப்படியாக விரிவடைந்து, தற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துைற மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
கொரோனாவை வீழ்த்துவதற்கு தடுப்பூசிதான் வழி. பிரதமர் மோடி தலைமையின் கீழ், தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. இதுவரை 70 கோடி டோசுக்கு மேல் போடப்பட்டுள்ளது.

13 நாட்களில் 10 கோடி
இந்த சாதனைக்காக சுகாதார பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துகள். முதல் 10 கோடி தடுப்பூசி போட்டு முடிக்க 85 நாட்கள் ஆனது. அதை 20 கோடி ஆக்க இன்னும் 45 நாட்கள் ஆனது. அடுத்த 29 நாட்களில் 30 கோடியாக உயர்த்தினோம். மேலும் 24 நாட்களில் 40 கோடியாகவும், 20 நாட்களில் 50 கோடியாகவும், 19 நாட்களில் 60 கோடியாகவும் உயர்த்தினோம். 60 கோடியில் இருந்து 70 கோடியாக உயர வெறும் 13 நாட்கள்தான் ஆனது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story