நாட்டிலேயே முதலாவதாக ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில் ஓடுதளம்


நாட்டிலேயே முதலாவதாக ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில் ஓடுதளம்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:16 AM GMT (Updated: 2021-09-09T15:08:33+05:30)

நாட்டிலேயே முதலாவதாக, ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை-925ல் அமைக்கப்பட்டுள்ள அவசரகால ஓடுதளத்தை மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்கரியும் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார்க உள்ளனர்.

ஜெய்பூர்,

போர் விமானங்களை அவசர காலங்களில் சாலைகளில் தரையிறக்குவதற்காக நாடு முழுவதும் 12 பாதைகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக விமானப்படையினருடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது.

இந்தநிலையில் நாட்டிலேயே முதலாவதாக, ராஜஸ்தான் மாநிலம்  பார்மரில், தேசிய நெடுஞ்சாலை-925ல்  அமைக்கப்பட்டுள்ள அவசரகால ஓடுதளத்தை மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்கரியும் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார்க உள்ளனர்.

இந்த இருவரும் வரும் விமானப்படை விமானம், அந்த ஏர்ஸ்டிரிப்பில் ஒத்திகை அடிப்படையில் தரையிறங்கும். போர் விமானங்களை அவசரகாலத்தில் தரையிறக்க ஏதுவாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுதளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்காக 3 ஹெலிபேட்களும் அமைக்கப்பட்டுள்ளன.  முன்னதாக லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு போர் விமானம் ஒன்றை தரையிறக்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story