தேசிய செய்திகள்

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு + "||" + 26,200 new COVID19 cases, 29,209 recoveries and 114 deaths reported in Kerala today.

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு

கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவாக உள்ளது.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தீவிரம் பெரிதும் குறையாமல் தொடரும் சூழலில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கேரளாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,09,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு விகிதம் 16.69% ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,126 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,209 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40,80,665 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,36,345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா: போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சோதனை நடத்திய போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
கேரளாவில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சோதனை நடத்திய போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
4. கேரளாவில் மழை தொடர வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,058- பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.