20 வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு தலைவன் போலீசில் சரண்


20 வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு தலைவன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 9 Sep 2021 6:13 PM GMT (Updated: 2021-09-09T23:43:22+05:30)

சத்தீஷ்கார் மாநிலத்தில் 20 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு தலைவன் போலீசில் சரணடைந்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு முக்கிய தலைவன் இன்று  பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். சோடி முயா என்ற அந்த நக்சலைட்டு தலைவன் மீது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 20 குற்ற வழக்குகள் உள்ளன. 

போலீசாரிடம் சரணடைந்த நக்சலைட்டு தலைவன் சோடி முயாவின் தலைக்கு 8 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story