டெல்லியில் இன்று 36 பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் இன்று 36 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Sep 2021 9:31 AM GMT (Updated: 2021-09-10T15:01:38+05:30)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-  வது அலை பரவல் கட்டுக்குள் உள்ளது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளும் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில்  36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 52 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 399- ஆக உள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. 

Next Story