தேசிய செய்திகள்

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார் + "||" + West Bengal CM Mamata Banerjee files nomination for by-polls

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்;  மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்
பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பவானிபூர்  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.  பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில்  மம்தா பானர்ஜிக்கு  எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.  பவானிப்பூர் தொகுதியில் வரும் செப்-30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி முகம்
சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.
2. மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் 53 சதவீத வாக்குப்பதிவு - திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா சரமாரி புகார்
மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குகள் பதிவாகின. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர்.
3. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இதுவரை 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
4. நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
5. பவானிப்பூர் தொகுதி; மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.