இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீது கடும் நடவடிக்கை - குஜராத் முதல்வர்


இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீது கடும் நடவடிக்கை - குஜராத் முதல்வர்
x
தினத்தந்தி 11 Sep 2021 8:24 AM GMT (Updated: 2021-09-11T17:07:37+05:30)

பசுவதை செய்வோர் மீதும், இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார்.

அகமதாபாத் 

மாநில தலைநகரின் புறநகரில் உள்ள ரபாரி சமூகத்தின் (கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட வர்கள்) உறுப்பினர்களுக்காக அமைக்கப்படும் பயிற்சி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்  கலந்து கொண்டு முதல் ரூபானி பங்கேற்றார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட ரபாரி சமூகத்தினரின் கூட்டத்தில் பேசிய    கூறியதாவது;-

பசுக்களைக் காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் சட்டங்கள் உள்ளன.

இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.  அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Next Story