தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: மத்திய மந்திரி ஷெகாவத் + "||" + Centre Working to Ensure Tap Water Connection for Every Household by 2024, Says Union Minister Shekhawat

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: மத்திய மந்திரி ஷெகாவத்

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: மத்திய மந்திரி ஷெகாவத்
மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், ராஜஸ்தான் மாநிலம் கோடாவுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘ஜல் ஜீவன்’ திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, மொத்தம் உள்ள 19 கோடி வீடுகளில் 3 கோடியே 29 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது. அதன்பிறகு இதுவரை 5 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் 8 கோடியை தாண்டும். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறோம். 1 லட்சத்து 10 ஆயிரம் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.