தேசிய செய்திகள்

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி + "||" + 130 children hospitalised in West Bengal's Jalpaiguri with fever, dysentery

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

மேற்குவங்காளம்: 130 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2. மேற்குவங்காளத்தில் நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மேற்குவங்காளத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
3. மேற்குவங்காளம்: பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை
மேற்குவங்காளத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
4. மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக ஐகோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
5. நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு
நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்களியுங்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.