மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு


மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 11:22 AM GMT (Updated: 14 Sep 2021 11:22 AM GMT)

மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஐஸ்வால், 

மிசோரம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் 1,502- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் 300  சிறுவர்களும் அடங்குவர். மிசோரமில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 72,833- ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தொற்று பாதிப்புக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது. 

எனினும்,  தொற்று பாதிப்பு விகிதம்  முந்தைய நாள் 31 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 16.39 சதவிகிதமாக குறைந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,366- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 59,273- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story